Friday 31 July 2009

13. கதர் ஆடை இயக்கம்

பார்த்துக்கொண்டிருக்கும் வேலை அல்லது செய்து கொண்டிருக்கும் தொழில் அல்லது வகித்துக்கொண்டிருக்கும் பதவி இவற்றை நாட்டின் நலனுக்காக விட்டுக்கொடுக்க நம்மில் எத்தனை பேருக்கு மனம் இருக்கும். ஈ.வெ.ராமசாமிக்கு அந்த மனம் இருந்தது. நாட்டின் விடுதலைக்காக காங்கிரஸ் கட்சியில் இணைந்த போது தாம் வகித்த இருபத்தியென்பது பதவிகளையும் தூக்கி எறிந்தார் அவர். கதர் ஆடை அணிதல், மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு ஆகிய மூன்றும் காந்தியடிகளின் பிரச்சாரங்களில் முக்கிய பங்கு வகித்தது. அதனை அப்படியே உள் வாங்கிக்கொண்ட ஈ.வெ.ரா அதன் வழியில் மாறினார்.

தீண்டாமை கூடாது என்று பேசியும், கடைபிடித்தும் வந்தவர் தான் ஈ.வெ.ராமசாமி. அதனோடு இப்போது கதராடையும், மதுவிலக்கு பிரச்சாரங்களும் சேர்ந்துகொண்டன. சாரட் வண்டி, பட்டு, பாலீஸ்டர் ஆடைகள், செல்வந்தருக்கான அலங்காரங்கள் எல்லாவற்றையும் துறந்தார். கஞ்சி போட்ட கதர் ஆடைக்கு மாறினார். மாற்றத்தை தன் குடும்பத்தில் இருந்தே தொடங்கினார். ராசமாமியின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணமாவும் கதராடைகளுக்கு மாறினார்கள். என்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்த தாயார் சின்னத்தாயம்மையாரையும் கதராடை பக்கம் இழுந்துவந்தார் ராமசாமி. பின்னர் உறவினர்கள், நண்பர்கள் என தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் கதராடைக்கு மாற்றினார். அதன் பின் கதராடை தயாரிப்புக்கான நூற்புராட்டினம் தக்ளியும் அறிமுகம் செய்து வைத்து நூல் நூற்கத்தொடங்கினார்.

தொடர்ந்து பொதுப்பணிகளில் ஈடுபட்டதால்.. மண்டிக்கு செல்ல முடியவில்லை. அதனால் மண்டியை மூடினார். வெளியில் இருந்து வரவேண்டிய லட்சக்கணக்கான பணம் வராமல் போனது. இவ்வளவு பெருந்தொகையை இழக்க நேர்ந்த போதும் ஈ.வெ.ரா கலங்கவில்லை. சேலத்தில் பிரபலமாக இருந்த வழக்கறிஞர் விஜயராகவாச்சாரியார் என்ற காங்கிரஸ்காரர் கடன் பத்திரங்களைக் கொடுங்கள்.. கோர்ட் மூலம் வசூலித்து விடலாம் என்று சொன்னார். தமது கொள்கைக்கு முரணாக விசயம் நஷ்டம் ஏற்பட்டாலும் கொள்கைக்கு முரணாக போகமாட்டேன் என்று பிடிவாதமாக அந்த இழப்புக்களை தாங்கிக்கொண்டார் ராமசாமி. இப்படியும் ஒரு மனிதரா என்று வியந்த விஜயராகவாச்சாரி பல சந்தர்ப்பங்களில் இந்த சம்பவம் குறித்தும் பலரிடம் புகழ்ந்து பேசி இருக்கிறார்.

அரண்மனை போன்ற விட்டை விட்டு வெளியேறி கதராடை பிரச்சாரத்திற்கு நண்பர்கள் சகிதம் செல்லத்தொடங்கினார். முதலில் ஈரோட்டிலும், பின்ன்னர் அதனி சுற்றிய கிராமப்பகுதிகளுக்கும் செல்லத்தொடங்கினார். கொடை வள்ளல் வெங்கட்டரின் மகன், பிரபலமான வியாபாரி.. எல்லாவற்ரையும் துறந்து இவ்வளவு எளிமையாக கதராடை பிரச்சாரத்தில் ஈடு படுகின்றாரே.. நம்மிடம் இழப்பதற்கு என்ன இருக்கிறது.. என்று யோசித்த ஏழை, எளிய மக்களும், மற்ற செல்வந்தர்களும் கதராடைக்கு மாறத்தொடங்கினார்கள். ஆடை மாற்றம் மட்டும் போதும் என்று நினைக்கக்கூடியவரல்ல ராமசாமி. அதனால்.. அப்படி மாறியவர்களையும் பிரச்சாரம் செய்யும் படி கேட்டுக்கொண்டார்.

பிரச்சாரம் எளிமையாகப் பரவத்தொடங்கியது. தமிழகம் முழுக்க கிராமம் கிராமமாக தோளில் தூக்கியபடி கதராடைகளை விற்கப்போனார். அன்னிய ஆடைகளை கொழுத்திப் போட தயாராக இருக்கும் எளிய மக்களுக்கு தம் செலவிலேயே கதராடைகளை வழங்கவும் செய்தார். அனேகமாக தமிழகத்த்தில் ஈ.வெ.ராமசாமியின் கால் படாத பகுதியே இருக்க முடியாது என்ற அளவில் கதராடை பிரச்சாரத்தை நடத்தினார். மாநிலம் முழுவதும் கதராடை பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

தமிழகத்தில் கதர்த்துணி அங்காடிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் எண்ணி அதை செயல் வடிவமும் கொடுத்தார் ராமசாமி. பல பகுதிகளில் அங்காடிகள் திறக்கப்பட்டன. பின்னாலில் பிரபல எழுத்தாளராகவும், பத்திரிக்கை ஆடிரியராகவும் வளர்ந்த கல்கி-ரா.கிருஷ்ணமூர்த்தி திருச்செங்கோடு கதர் அங்காடியில் முதலில் பெரியாரால் பணிக்கு அமர்த்தப்பட்டார். காங்கிரஸ்காரர்கள் முதலில் கதராடைக்கு அவர் தம் குழும்பத்தினருடன் மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார் ராமசாமி. காங்கிரஸ் அதனை ஏற்றது. எல்லோரும் கதர் ஆடைக்கு மாறினார்கள். காங்கிரஸ் கட்சியில் இல்லாதவர்கள் கூட கதராடைக்கு மாறினார்கள். தமிழகத்தில் கதராடை புரட்சி நடந்தது என்று கூட சொல்லலாம். மற்ற பகுதிகளை விட தமிழகத்தில் இது வேகமாக பரவ முக்கிய காரணமாக இருந்தது ஈ.வெ.ராமசாமியின் உழைப்பும், பேச்சும் என்றால் அது மறுக்க முடியாது.

இங்கே இரு செய்தியை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மதுஒழிப்பு பிரச்சாரத்தில் கள் உண்ணாமையும் ஒரு அங்கமாக இருந்தது. காந்தியடிகள் அப்படி சொன்னதும்... தன் தோட்டத்தில் இருந்த அய்நூறுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை ஒரே நாளில் வெட்டிச் சாய்த்தார் ஈ.வெ.ராமசாமி. அந்த காலகட்டத்தில் தென்னை மரத்திலிருந்தும் கள் இறக்குமதி வெகு விமர்சையாக நடந்து வந்தது. அதனால்.. நிறைய பலனை எதும் செய்யாமல் தந்துகொண்டிருக்கின்ற தென்னை மரங்களை பலரின் எதிர்ப்புக்களையும் மீறி வெட்டிச் சாய்த்தார்.

மது ஒழிப்பு திட்டத்தை அமல் படுத்த வலியுறுத்தும் போராட்டத்தில் ஒரு பகுதியாக கள் உண்ணாமை போராட்டத்தை அறிவித்தார் காந்தியடிகள். இதனை எவ்வாறு நடத்துவது என்று திட்டமிட காந்தி தேர்வு செய்த ஊர் ஈரோட்டு. காந்தியின் அறிவிப்பைத் தொடர்ந்து ஈரோட்டுக்கு வந்திறங்கிய காங்கிரஸ் தலைவர்களுடன் ஈ.வெ.ராமசாமியும் கலந்து பேசி கள்ளுக்கடைக்கு முன் மறியல் நடத்துவது என்று முடிவு செய்கிறார்கள்.

ஈ.வெ.ராமசாமி மதுகொள்கையில் காட்டி வந்த ஆதரவு தான் காந்தியையும் மற்ற காங்கிரஸ் தலைவர்களையும் ஈரோட்டுப் பக்கம் வந்து போராட்டத்திற்கு நாள் குறிக்க காரணமாக இருந்தது. மேலும் ஆங்கில அரசுக்கு அடிபணிந்து போய்க்கொண்டிருந்த நீதிக்கட்சியின் வளர்ச்சியை முடியடிக்க, காங்கிரஸ்காரர்களின் மறைமுக தூண்டுதலால் திவான் பகதூர் கேசவப்பிள்ளை போன்றவர்களினால துவங்கப்பட்ட சென்னை மாகாணச் சங்கத்தின் மாநாட்டை ஈரோட்டில் வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர் ஈ.வெ.ராமசாமி. ராமசாமி ஒரு காரியத்தை தொட்டு விட்டால் வெற்றியைப் பார்க்காமல் ஓயமாட்டார் என்பதை அறிந்திருந்ததால்.. கள்ளுக்கடை முன் மறியல் போராட்டத்தை ஈரோட்டிலேயே துவங்க வேண்டும் என்றும் காங்கிஸ்காரர்கள் ஆசைப் பட்டார்கள்.

---------------------
(தொடரும்) *Download As PDF*

Thursday 30 July 2009

12. பதவிகளை தூக்கி எரிந்த ஈ.வெ.ரா

வெங்கட்டர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப் பட்டிருக்கும் போது அவர் பெயரில் தர்மங்கள் செய்வதற்கு ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தும் முயற்சியில் ஈ.வெ.ரா ஈடுபட்டார். ஆனால் இதற்கு ஈ.வெ.ராவின் அண்ணன் கிருஷ்ணசாமி கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். எல்லா எதிர்ப்புகளையும் மீறி தான் நினைத்ததைச் செய்து முடித்தார் ராமசாமி. ஆண்டொன்றுக்கு குடும்ப சொத்திலிருந்து ரூபாய் இருபதாயிரம் வரை வருமானம் வரும். அதில் இரண்டு மகன்களின் குடும்பச் செலவுக்கும் பணம் ஒதுக்கி மீதி வருமானம் தர்மத்திற்கு செலவிடப் படவேண்டுமென அறக்கட்டளை உருவாக்கி விட்டார்.

வெங்கட்ட நாயக்கர், 1911-ஆம் ஆண்டு காலமானார். வைஷ்ணவ சம்பிரதாயப்படி அவரது உடல் எரியூட்டப் பட்டிருக்க வேண்டும். ஆனால் ராமசாமி அவ்வாறு செய்யவில்லை. ஈரோடு புகைவண்டி நிலையம் அருகில், அந்தக் குடும்பத்திற்கு சொந்தமான இடம் இருந்தது. ரயில்வே நிர்வாகம் அந்த இடத்தை கையகப் படுத்தும் முயற்சியில் தீவிரமாக இருந்தது. எனவே அதைத் தடுப்பதற்காக ஒரு திட்டம் போட்டார். மரணப் படுக்கையில் இருந்த வெங்கட்டரை சந்நியாசம் வாங்கச் செய்தார். சந்நியாசிகளை எரியூட்டக் கூடாது என்ற மரபு இருப்பதால் தன் சொந்த நிலத்திலேயே மரணத்திற்குப் பின் வெங்கட்டரை புதைத்தார். மனிதர் புதைக்கப் பட்ட இடத்தை ரயில்வே நிர்வாகம் கையகப் படுத்த முடியாது என்பதால் இவ்வாறு செய்தார்.

ஈ.வெ.ரா வகித்து வந்த இருபத்தொன்பது பதவிகளில் முக்கியமானது ஈரோடு நகர்மன்றத் தலைவர் பதவி. அந்த சமயத்தில்தான் காவேரி ஆற்றிலிருந்து ஈரோட்டு நகருக்கு குடிநீர் கிடைக்க குழாய்களை அமைத்தார். காவிரியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் வடிகட்டி, பாதுகாக்கப்பட்ட தண்ணீராக விநியோகிக்க ஏற்பாடு செய்திருந்தார். அநேகமாக இது தென்னிந்தியாவின் முதல் முயற்சி எனலாம். அதற்கும் கூட எதிர்ப்பு பலமாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியின் வழியாக வரும் குடி நீர் குழாய் சேரிகளுக்கு முதலிலும், பின்னர் ஊருக்குள்ளும் தண்ணீர் வரும் படி ஏற்பாடு செய்யப்பட்டதே எதிர்ப்புக்கு காரணம்.

குழாய் வழியாக தீட்டு வந்துவிடும் என்று யாரோ கட்டிவிட்ட பொய்யை நம்பிய மக்கள் இதனை எதிர்த்தார்கள். ஈ.வெ.ரா-வின் தாயார் சின்னத்தாயம்மையார் கூட இதற்கு எதிர்ப்பு காட்டினார். எல்லோரின் எதிர்ப்பையும் புறங்கையால் தள்ளி விட்டு தம் திட்டத்தை நிறைவேற்றினார் ஈ.வெ.ரா. எல்லாவற்றிற்கும் பரிகாரம் சொல்லும் நம்மவர்கள் இதற்கும் ஒரு பரிகாரத்தை கண்டுபிடித்தார்கள். முதலில் ஒரு பிராமனர் வந்து பூஜை செய்து, குழாயில் கோமியம்(மாட்டின் சிறுநீர்) தெளித்து புனித்தப்படுத்துவார். பின்னர் கொஞ்சம் புளியை கொண்டு குழாயின் தலை சுத்தம் செய்வார். அதன் பின்னார் அவர் தண்ணீர் பிடித்துக்கொண்டு போன பின்பு யாரும் தண்ணீர் பிடிக்கலாம். ஒவ்வொரு பிரமணரும் இவ்வாறு செய்ய, பிராமணரல்லாதோரும் இதையே செய்யத்தொடங்கினார்கள்.

ஒரு நாள் ஒரு இஸ்லாமியப் பெண் இது போல செய்வதைகண்ட பெரியார் அவரிடம், ‘உங்கள் மதத்தில் இது போன்ற மூட பழக்கங்கள் கிடையாதே நீங்களுமா நம்புகிறீர்கள் தீட்டு சமாச்சாரத்தை’ என்று மற்றவர்கள் செய்வதற்காக காரணத்தை சொல்லிக் கேட்டார். அப்பெண்மணியோ, ’எங்களுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. புளி போட்டு குழாய்யை தேய்த்தால் தான் தண்ணீர் வரும் என்று எங்களிடம் சொன்னார்கள் அதனால் செய்தோம்’ என்று அப்பவியாக சொன்னார்.

ஒரு சாரார். இதன் காரணமாக ஈரோட்டு நகர்மன்ற தலைவர் பதவியில் இருந்து ராமசாமியை நீக்குமாறு கடிதங்கள் எழுதினார்கள். கடிதத்திற்கு மதிப்பளித்து, உண்மையை அறிய வந்த குழு, பெரியார் ஏற்கனவே பல பதவிகளில் பொறுப்பு வகிப்பதையும், மக்களால் அதிகம் நேசிக்கப்படுவதையும் கண்டனர். இவரை விட்டால் வேறு சரியான நபர் இல்லை என்று சொல்லி திரும்பிச் சென்று விட்டனர். இது கடிதம் எழுதியவர்களில்
முகத்தில் கரியைப் பூசியது.

அதே போல ஈரோட்டு கடைவீதியை அகலப் படுத்தவும் செய்தார். அதற்கு முன்பு வரை கடைவீதியின் இருபுறமும் தாராளமாய் ஆக்ரமிப்புச் செய்து வைத்திருந்தார்கள் வணிகப் பெருமக்கள். இதனால் அந்தச் சாலையில் நடந்து போவது என்பது கூட சிரமமாக இருந்தது. பல பெரும் வணிகர்களின் எதிர்ப்புக்களையும் மீறி ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை ஒழுங்கு படுத்தினார். அந்தப் பெரும் வணிகர்களில் பலர் ஈ.வெ.ராவின் நண்பர்களாகவும் இருந்தார்கள். செல்வச் செழிப்பில் அவருக்கு நிகராகவும் இருந்தார்கள். இவை எதுவுமே ராமசாமியை தயங்க வைக்கவில்லை. இவரின் இந்த தைரியமான முடிவு ஈரோட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

வர்த்தகத்திலும் பொதுத் தொண்டிலும் ஈ.வெ.ரா முழுகவனம் செலுத்திய காலத்தில் நாட்டு நடப்பு குறித்தான செய்திகளையும் ஆழ்ந்து படித்தார். நாட்டு விடுதலைக்காக போராடி வந்த காங்கிரஸ் இயக்கம் குறித்து அவருக்கு அக்கறை இருந்தது. அவர்கள் அகிம்சை முறையில் படும் அல்லல்கள் குறித்தான அனுதாபம் இருந்தது. போக்குவரத்து மையப் பகுதியாக இருந்ததால் ஈரோடு வழியாகச் செல்லும் காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் பலர் ஈரோட்டில் இறங்கி நாயக்கர் வீட்டில் தங்கி உணவருந்திவிட்டு பயணத்தைத் தொடர்வது வழக்கம். அந்தக் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களான சேலம் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு, சி. ராஜகோபாலாச்சாரியர் என்ற ராஜாஜி ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள்.
ராஜாஜி அப்போது சேலம் நகர்மன்ற தலைவராக இருந்தார்.

டாக்டர் வரதராஜுலு நாயுடு காங்கிரஸின் மிகப்பெரிய பேச்சாளர். மக்களுக்குச் சுலபமாக புரியும் விதத்தில் எளிமையாக அரசியல் நிலைமைகளை விளக்கிப்பேசுகிறவர். மாலை ஆறுமணிக்கு மேடையில் பேச ஆரம்பித்தால் இரவு ஒன்பது மணிக்கு தன் பேச்சை முடிப்பார். தொடர்ந்து நீண்ட நேரம் பேசக்கூடியவர் என்றாலும் கூட்டம் ஒரு போதும் கலையாது. இவர் எங்காவது பேசுகிறார் என்ற செய்தி அறிந்தால் மக்கள் கிராமங்களில் இருந்து எல்லாம் வண்டி கட்டிக்கொண்டு பொதுக்கூட்ட மேடைக்கு வந்து சேர்வார்கள். டாக்டர் வரதராஜுலு ‘தமிழ்நாடு’ என்ற பெயரில் ஒரு பத்திரிக்கையும் நடத்தி வந்தார். அக்காலகட்டத்தில் காங்கிரசாரின் முக்கியமான பிரச்சார கருவியாகவும் இப்பத்திரிக்கை பயன்பட்டது.

ஈ.வெ.ரா-வின் திறமையான நிர்வாகத்தால் ஈர்க்கட்டப்பட வரதராஜுலுவும், ராஜாஜியும் காங்கிரஸில் ராமசாமி இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதினார்கள். தமது இயக்கத்தினை பரவலாக எல்லா தரப்பு மக்களிடமும் கொண்டு போய் சேர்க்க உகந்தவர்களை பிடித்துக்கொண்டிருந்தது காங்கிரஸ்.

அப்போது தான் வி.கல்யாணசுந்தரம், வ.உ.சிதம்பரம் போன்றவர்களையும் தம்முள் இணைத்திருந்தது காங்கிரஸ். ஈ.வெ.ராவையும் இணைத்துக்கொண்டால் இன்னும் பலம் சேரும் என்று நினைத்தனர். இவ்விருவரின் தொடர் வற்புறுத்தலால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஈ.வெ.ராமசாமி.

கொஞ்ச நாட்களில் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் அறிவித்து, எல்லோரையும் அதில் ஈடுபடும் படி வேண்டுகோள் வைத்திருந்தார். அதில் ஈடுபட்டு முழுமூச்சாக செயலாற்றுவதற்கு தான் வகித்து வரும் பதவிகள் இடையூராக இருக்கும் என்று கருதிய ஈ.வெ.ராமசாமி, இருபத்தியென்பது பதவிகளையும் துறந்தார்.

(தொடரும்)

*Download As PDF*

Wednesday 29 July 2009

நான் ஒரு தொண்டன்

நான் ஒரு பிறவித் தொண்டன்; தொண்டிலேயே தான் எனது உற்சாகமும் ஆசையும் இருந்து வருகிறது. தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது. தலைவனாக இருப்பது என்பது, எனக்கு இஷ்டமில்லாததும் எனக்குத் தொல்லையானதுமான காரியம். ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும், எனது உண்மைத் தோழரும் கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின் அபிப்பிராயத்தையும் வேண்டுகோளையும் மறுக்க முடியாமலும் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேனேயொழிய, இதில் எனக்கு மனச் சாந்தியோ, உற்சாகமோ இல்லை. இருந்தாலும் என் இயற்கைக்கும், சக்திக்கும் தக்கபடி நான் நடந்து வருகிறேன் என்றாலும் அதன் மூலம் எல்லோரையும் திருப்தி செய்ய முடியவில்லை.

(சென்னை கன்னிமரா ஓட்டலில், 6.10.1940இல் சொற்பொழிவு, குடிஅரசு, 13.10.1940)


*Download As PDF*

11. ஈ.வெ.ராமசாமி நிர்வகித்த கோவில் பணிகள்

வெங்கட்டரின் வரத்து குறைந்தது ஒரு வகையில் ஈ.வெ.ராவுக்கு நிம்மதியாக இருந்தது. சாதி, மத வேறுபாடுகளை கண்டுகொள்ளாமல் கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், இஸ்லாமியர்கள் என எல்லாப் பிரிவினருடனும் கலந்து பழகுவதற்கு ஏதுவாக இருந்தது. எப்பொழுதும் கடையில் பத்துக்கும் குறையாத நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. அவர்களின் புகை, மது போன்ற மேலாதிக்க பழக்கங்களுக்கு ஈ.வெ.ராவே புரவலராக விளங்கி வந்தார்.

ஈரோட்டில் எவ்வகுப்பினர் வீட்டிலும் நன்மை தீமை நடைபெற்றாலும் முதலில் இவரை அங்கு காணலாம். எல்லோரும் இவருக்கு தகவல் தந்து விடுவார்கள். சில இடங்களில் அழைப்பு இல்லாமலேயே நண்பர்களுடன் அந்த மாதிரி இடங்களுக்குப் போவதும் உண்டு. இவரின் தாராள உதவும் குணம் ஊர் முழுக்க இவரது புகழைப் பரப்பியது. குடும்ப விவகாரங்கள், வியாபார தகராறுகள், சண்டை சச்சரவுகள் எல்லாவற்றையும் தீர்க்கும் பொறுப்பும் இவரிடம் வந்து சேர்ந்தது. சில சமயங்களில் கோர்ட் விவகாரங்களும் இவரது தீர்ப்புக்கு வருவதுண்டு. கௌவரவ நீதிபதியாக பன்னிரெண்டு ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் பிளேக் நோய் பரவி பெரும் பீதியேற்பட்டிருந்த நேரம். மக்கள் நகரங்களை காலி செய்து தங்களின் வசதிக்கேற்ப வேறு இடம் மாறிக் கொண்டிருந்தார்கள். ஏழை மக்கள் போக வழியின்றி உள்ளூருக்குள்ளேயே பயத்துடன் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். பிளேக் நோயினால் இறந்தவர் வீட்டில் எல்லோரும் சடலம் உட்பட மற்ற எதையும் தொடாமல் வீட்டையே கொளுத்தி தெருவில் நின்று கொண்டிருந்த அவலமும் நிகழ்ந்தது. இந்த சமயத்தில் தான் துளியும் அஞ்சாமல் இறந்தவரின் சடலத்தை தோளில் தூக்கி சுடுகாட்டிற்கு கொண்டு போய் எரியூட்டி, ஈமச்சடங்குகளை இவரே முன்னின்று செய்தார்.

இப்படி பிளேக் நோயினால் பாதிக்கப்பட்ட பலருக்கு இவர் செய்த உதவிகளினால் ஈ.வெ.ராவின் புகழ் மேலும் பரவியது. வாரம், பத்து நாட்களுக்கு மேலாக பிளேக் நோய் பாதிக்கப்பட்டவர்களோடு ஈ.வெ.ரா நேரம் செலவழிப்பதை கண்டு அஞ்சிய தேவையற்ற நண்பர்கள் எல்லோரும் விலகி ஓடினார்கள்.

ஈ.வெ.ராமசாமி, எத்தனையோ சமூகம் மறுத்த, தீய பழக்கமுடைய நண்பர்களோடு நெருக்கமாகத் தொடர்பிலிருந்த போதும், மது அருந்துதல் என்ற பழக்கத்திற்கு மட்டும் அடிமையாகவே இல்லை. எப்போதாவது வெற்றிலை பாக்கு போடுவதுண்டு. புகைபிடிக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது. இவற்றையும் கூட தனது நாற்பதாவது வயதில், அறவே நிறுத்தினார். நல்ல பண்பாளர்கள் அறிவாளிகளின் உறவுகள் வந்து சேரத் தொடங்கியது இச்சமயத்தில்தான். பா.வே.மாணிக்கனார், கரூர் பெரும்புலவர் மருதையா, கைவல்ய சாமியார் ஆகியோரின் நட்புகள் வளரத் தொடங்கியது.

புலவர் மருதையா புராண புரட்டுக்களை பிரித்து மேய்வதில் வல்லவர். எதிர்காலத்தில் ஈ.வெ.ராவின் திடமான கொள்கைக்கு அடித்தளமாக அமைந்தது இவரது நட்பு. கைவல்யம் என்னும் வேதாந்த நூலை நன்கு கற்றுத் தேறியவர் என்பதால் கைவல்ய சாமியார் என்று பெயர் பெற்றவர், பார்ப்பனீயத்துக்கு பரம விரோதியாய் இருந்தார். ஈ.வெ.ரா காங்கிரஸ்காரராய் இருந்த போது அவரை கடுமையாகக் கண்டித்தவர்களில், இவரும் முக்கியமானவர். பார்ப்பனர் அல்லாதவர்களை ஒன்று திரட்ட வேண்டும் என்ற கைவல்ய சாமியாரின் எண்ணமும் பெரியாருக்கு பிற்காலத்தில் உறுதுணையாக இருந்தது.

தேடிச் சென்று காவாலித்தனம் செய்து கொண்டிருந்த ஈ.வெ.ரா தன் அரிசி மண்டியை விட்டு அதிகம் வெளியே போவதை குறைத்துக் கொண்டார். அப்படியே எங்காவது போவதாக இருந்தாலும் கடை அடைத்தபின் போய்விட்டு, காலையில் கடை திறக்க வந்துவிடுவார். பொது காரியங்களில் இவரின் ஈடுபாடு, தொழிலில் இவரது பக்தியை ஆகியவற்றைக் கண்டு மெய்சிலிர்த்துப் போயிருந்த வெங்கட்டர் ஊர்ப் பொதுக் கோவில்கள், சர்க்கார் தேவஸ்தான தொடர்பான காரியங்கள், உற்சவங்கள் முதலிவற்றில் தாம் விலகிக் கொண்டு இவரை முன்னிறுத்தினார். ஊர் பெருமை சேர்க்கும் விஷயங்களான இவற்றில் பெரும் புகழ் பெற்ற வெங்கட்டர்

தாமிருக்கும் போதே ஈ.வெ.ராவை முன்னிறுத்தியதால் இவரின் பெயரும் கோவில் காரியங்களிலும் வல்லவர் என்று பரவத் தொடங்கியது. தமக்கு கொடுக்கப்பட்ட பதவிகளை பொறுப்புக்களாய் உணர்ந்து சரிவர கடமையாற்றினார். அநேகக் காரியங்களில் இவரின் ஈடுபாடு இப்படியே இருந்தது. அதனாலேயே நம்பிக்கையில்லா காரியங்களில் கூட அதிக கவனமாகவும், நாணயமாகவும் நடந்து கொண்டார்.

ஈரோடு மாவட்ட தேவஸ்தான கமிட்டியின் தலைவராகவும் பொறுப்பேற்றார் ஈ.வெ.ரா. உருவ வழிபாட்டு எதிர்ப்பாளர், கோவில்களில் நம்பிக்கையில்லாதவர், திருவிழாக்கள் வீண் செலவு என்பவர், இவை எல்லாம் மக்களிடையே மூடநம்பிக்கையை வளர்க்கவே செய்கின்றன என்பதை உறுதியுடன் நம்பியவர் – தேவஸ்தான கமிட்டியின் தலைவரானதும், தமது பொறுப்புணர்ந்து கமிட்டிக்குட்பட்ட பல கோவில்களை புணரமைத்தார். மகனின் செயல்பாடுகளினால் உள்ளம் குளிந்தார் வெங்கட்டர். காலியாகிவிடுவானோ என்று பயந்த மகன் இவ்வளைவு பொறுப்பானவனாக மாறியதைப் பார்த்தால் எந்த தந்தைக்குத்தான் மகிழ்ச்சி ஏற்படாது.

கோவில் செல்வங்கள் கொள்ளை போகாமல் பாதுகாக்கப் பட்டன. கோவில் நிலங்களின் குத்தகைத் தொகையை ஏற்றினார். கோவிலுக்குப் பழுது வராமல் புதுப்பித்தல், கும்பாபிஷேகம் செய்வது போன்ற திருப்பணிகளை தொய்வின்றி செய்து வந்தார். இவர் பொறுப்பேற்கும் போது கடனிலிருந்த கமிட்டியை தலை நிமிரச் செய்தார். பல ஆண்டுகள் தலைவராக இருந்துவிட்டு அப்பதவிகளில் இருந்து நீங்கும் போது சுமார் நாற்பத்தியையாயிரம் ரூபாய் தேவஸ்தான கமிட்டிக்கு என சேர்த்து வைத்திருந்தார். அந்த காலகட்டத்தில் நாற்பத்தியையாரம் ரூபாயெனில் இன்றைய மதிப்புக்கு கற்பனை செய்து கொள்ளவும்.

இந்த சமயத்தில்தான் ஈரோடு நகர பாதுகாப்புக் கழகத் தலைவராகவும் ஆனார். 1919ல் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கும் வரையிலும் சேர்மன் பதவியில் இருந்தார். அதற்கு முன் கௌரவ நீதிபதி, தாலுக்கா போர்டு உபதலைவர், வியாபாரிகள் சங்கத் தலைவர், ஜில்லா போர்டு மெம்பர் என பல பதவிகளை வகித்தாலும் ஈ.வெ.ரா ஈரோடு நகராட்சித்தலைவராக இருந்து ஆற்றியுள்ள சேவையே நேரடி அரசியலில் இறங்குவதற்கு முன்பான அவரது வாழ்வில் அதிகபட்ச புகழை பெற்றுத்தந்தது.

(தொடரும்)

*Download As PDF*

Monday 27 July 2009

10. ராமசாமி நாயக்கர் மண்டி உதயம்

ஒரு வழியாக முகவரியைக்கொண்டு சுப்பிரமணிய பிள்ளையின் வீட்டைக் கண்டு பிடித்தார் வெங்கட்டர். வீட்டின் வாசலின் நின்று கொண்டு, கதவு எண்களை சரி பார்த்துக்கொண்டார்.

நேரமோ.. நடு நிசியை நெருங்கிக்கொண்டிருந்தது. கதவைத் தட்டுவதில் கொஞ்சம் தயக்கம் காட்டினார் வெங்கட்டர். அவருடன் இருந்தவர்கள் பரவாயில்லை கதவைத் தட்டுங்கள் என்று சொன்னார்கள்.

வேறு வழி தெரியவில்லை. தான் தேடி வந்தது ராமசாமியைப் பார்க்க.. அவன் கிடைத்தால் போதும்.. கதவைத் தட்டினார். பதில் இல்லை. மீண்டும் பலங்கொண்டு கதவைத்தட்டினார்.

மொட்டைத் தலையில் கொஞ்சமாய் முடி வளர ஆரம்பித்த நிலையில் இருந்த ராமசாமி கதவைத்திறந்தார். அப்பாவை பார்த்த அதிர்ச்சியில் உறைந்து நிற்க, வெங்கட்டரோ.. ‘பிள்ளைவாள் இருக்காரா.., எங்கே என் பிள்ளை.. பிள்ளைவாள்.. பிள்ளைவாள்..’ என்று சத்தம் கொடுத்தபடியே ராமசாமியை தள்ளிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். சத்தம் கேட்டு வெளியே வந்த சுப்பிரமணியத்துக்கும்

வெங்கட்டரைப் பார்த்ததும் மர்மாக இருந்தது. ‘வாங்க..வாங்க..’ என்று வாய் வரவேற்றாலும் மனதில் குழப்பங்கள் அதிகமானது. யார் சொல்லி வந்திருப்பார்? ராமசாமி இங்கிருப்பது எப்படி இவருக்கு தெரியும்? தான் தகவல் கொடுத்ததாக ராமசாமி தன்னை தவறாக நினைப்பாரோ? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.

‘உட்காருவது இருக்கட்டும்.. மொதல்ல என் பையன் ராமசாமி இங்கிருக்கான்னு தகவல் கிடைச்சதே.. அவனைக் கூப்பிடுங்கோ.. நான் பார்க்கனும்..’

சுப்பிரமணியத்துக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. அவரின் அருகிலேயே தலை குனிந்து நிற்கும் மகனை அடையாளம் காணமுடியாதவராக வெங்கட்டர் இருந்தார். இவர்கள் இருவரின் அமைதி வெங்கட்டருக்கு சற்று எரிச்சலைத் தந்தாலும், வெளிக்காட்டாமல், ‘பிள்ளைவாள்.. பையனை கூப்பிடுங்கோ.. அவனைப் பார்க்கத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன்.. இப்படியே அமைதியா இருந்தா எப்படி..? ராமசாமீ.. ராமசாமீ.., வெளியில வாப்பா..” என்று குரல் கொடுத்தார் வெங்கட்டர்.

சுப்பிரமணியம் ராமசாமியின் முகத்தைப் பார்த்தார். இனிமேலும் அமையாக நிற்பது சரியல்ல என்று முடிவு செய்த ராமசாமி ஒரு அடி முன் வந்து நின்றார். இவர்களின் செயல்கள் வெங்கட்டருக்கு விளங்க வில்லை. ‘நைனா.. நான் தான் நைனா..’ என்று ராமசாமி.. சொன்னது தான் தாமதம்.. வெங்கட்டருக்கு குரல் அடையாளம் தெரிந்தது. அதுவரையிலும் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அனைத்தும் கண்ணீராக வெளிவந்தது. ஆசையாக மகனை இறுக்கித் தழுவிக்கொண்டார். தந்தையின் பாசமும், கண்ணீரும் ராமசாமியின் கண்களையும் ஈரமாக்கியது.

தந்தையும் மகனும் இணைந்தது சுப்பிரமணியத்திற்கு நிம்மதியைக் கொடுத்தது. வெங்கட்டரை வீட்டுக்குள் அழைத்துச்சென்று அமர வைத்தார். பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டார்கள்.


பெரியார் சில சம்பவங்கள்…

குத்தூசி குருசாமி விடுதலையில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம். பெரியாரிடம் வந்தார் குத்தூசி, ‘அய்யா.. இன்னைக்கு செய்தி போடுவதற்கு ஏதும் சிறப்பான செய்தி இல்லையே என்ன செய்யலாம்? என்று கேட்டாராம்.

‘இவ்வளவு தானா… காலையில வந்த ‘இந்து’ பத்திரைக்கையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எது எல்லாம் சரி என்று வந்திருக்கிறதோ.. அந்த கட்டுரைகள் அனைத்தும் தவறு என்று பதில் எழுதுங்கள். எது எல்லாம் தவறு என்று வந்திருக்கிறதோ.. அந்த கட்டுரைகள் எல்லாம் சரி என்று பதில் கட்டுரை எழுதுங்கள்.’ என்றாராம் பெரியார்.

அடுத்த நாளே கிளம்புவது என்பது வெங்கட்டரின் எண்ணம், ஆனால் சுப்பிரமணியோ சில நாட்கள் தங்கிவிட்டுப் போகும் படி வேண்டிக் கொண்டார். ராமசாமியின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. அப்போது தான் ஐத்ராபாத்தில் இருக்கும் நகைகளை வர வைக்க முடியும். அப்பாவையும், உடன் வந்தவர்களையும் படுக்க வைத்து விட்டு, சுப்பிரமணியத்திடம் வந்து ஐத்ராபாத் முருகேச முதலியாருக்கு தந்தி கொடுத்து தாம் கொடுத்துவிட்டுப் போன நகைகளை அனுப்பி வைக்கும் படி ஒரு தந்தி அனுப்பச் சொன்னார்.

சுப்பிரமணியமும் அதன் படி செய்ய, முருகேச முதலியார் தன் வேலையாள் மூலம் நகைகளை ஒரு பெட்டியில் போட்டு கொடுத்து அனுப்பினார். அந்த நகைப்பெட்டியை வெங்கட்டரிடம் கொண்டுவந்து கொடுத்தார் ராமசாமி.

இத்தனை நாட்களின் தம் மகன், நகைகளை விற்றுத்தான் ஊர்சுற்றி, சாப்பிட்டு இருப்பான் என்று நினைத்துக்கொண்டிருந்த வெங்கட்டருக்கு நகைகளைக் கண்டதும் வியப்பு ஏற்பட்டது.

‘ராமசாமி… என்னப்பா.. இது.. நகை எல்லாம் அப்படியே இருக்கு போலிருக்கே…, அப்ப இத்தனை நாள் சாப்பாட்டுக்கு என்னப்பா செய்தாய்?’ என்று கேட்டார் வெங்கட்டர். ‘ஈரோட்டில் நீங்கள் போட்ட அன்ன தானங்களை எல்லாம் காசியில் வசூலித்தேன் அப்பா’ என சிரித்த படியே விளக்கிச் சொன்னார் ராமசாமி. காசியில் அவர் செய்திருந்த கலாட்டாக்களைக் கேட்ட எல்லோரும் சிரித்தனர். வெங்கட்டருக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும், ராமசாமி பட்ட துயரங்களை நினைத்தால் துக்கமாக இருந்தது.

எல்லா நகைகளையும் திரும்பக்கொடுத்து அணிந்துகொள்ளச்சொன்னார் வெங்கட்டர். ராமசாமியோ மறுந்தார். நகைகளை விற்றுத்தான் இத்தனை நாள் சாப்பிடிருப்பான் என்று ஊரில் இருக்கும் மற்றவர்கள் கருதாமல் இருக்கவாவது நகைகளை அணிந்துகொள் என்று வற்புறுத்தி அணிந்து கொள்ளச் சொன்னார். வெங்கட்டரின் வேண்டு கோளை ஏற்றுக்கொண்டு, நகைகளை அணிந்துகொண்டார் ராமசாமி.

எல்லோரும் எல்லூரை விட்டு சென்னை வழியாக ஈரோடு வந்து சேர்ந்தார்கள். வீட்டில் ஏக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. வந்திறங்கிய சில தினங்களிலேயே ராமசாமிக்கு பொறுப்பு வரவேண்டும் எனில் ஏதாவது பெரிய பொறுப்பு கொடுக்க எண்ணினார் வெங்கட்டர்.

சின்னதாய்யம்மையாரிடம் கலந்து பேசி, ‘வெங்கட்ட நாயக்கர் மண்டி’ என்றிருந்த பெயரை ‘ஈ.வெ.ராமசாமி மண்டி’ என்று பெயர் மாற்றி, கடையின் சாவியை ராமசாமியின் கையில் ஒப்படைத்தார் வெங்கட்டர்.


ஈ.வெ.ரா.வின் தனித்துவமாக உருப்பெற்றது அப்போது தான். கடைப் பொறுப்புக்கு வந்த பின் ஈ.வெ.ரா.வின் போக்கில் நிறைய மாற்றம் கண்டார் வெங்கட்டர். மண்டியை மகனுக்கு கொடுத்து விட்டாலும் தினமும் மண்டிக்கு வந்து சிறிது நேரம் இருந்து விட்டு போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் வெங்கட்டர். வியாபாரத்தில் ஈ.வெ.ரா.வின் நுட்பம் கண்டு வியந்தார்.

ஈ.வெ.ரா. பொறுப்பு ஏற்றபின் வியாபாரம் முன்பை விட சூடு பிடிக்கத்தொடங்கி இருந்தது. தோற்றத்திலும் ஈ.வெ.ரா மாறிப் போயிருந்தார். முறுக்கிவிட்ட மீசையும், தலையும் தலைப்பாகையுமாய் பணக்கார வியாபாரிகளுக்கான அடையாளத்திலிருந்தார். புதிது புதிதாக வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினார்கள். எல்லோரின் கணக்கு களையும் வெங்கட்டர் போல, தனி நோட்டு போட்டு எழுதாமல், துண்டுத் துண்டான காகிதங்களை- லேயே எழுதி வைத்திருந்தார் ஈ.வெ.ரா. அவரவர்க்கான கணக்கு பார்க்கும் போது சிரமமின்றி துண்டு காகிதத்தை எடுத்து சரி பார்த்துக்கொண்டார். கணக்கு நேர் செய்பப்பட்டவுடன் வாடிக்கையாளரின் முன்னாலேயே அவரின் கணக்குத் துண்டுப் பேப்பரை கிழித்துப் போட்டு விடுவார்.

வியாபரம், தன் குடும்பம் என்று மட்டும் இருந்து விடாமல். ஊரின் விசயங்களிலும் அக்கரை காட்டினார் ஈ.வெ.ரா. அவரின் சமயோசிதம், வழக்குகளில் சரியான தீர்ப்பு வழங்கும் முறையால்.. அவரின் புகழ் பரவத்தொடங்கியது. ஒரு வியாபாரியாக மட்டுமல்லாது, சமூக அக்கரையுள்ள மனிதனாகவும் அறியப்பட்டார்.

மகனின் வளர்ச்சி கண்டு பூரித்துப் போன வெங்கட்டர், இனி நிம்மதியாக ஆன்மீகத்தில் கவனம் செலுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தவராய்.., மண்டிப் பக்கம் வருவதை குறைத்து, பூஜை, பஜனை என்று ஈடுபடலானார்.

(தொடரும்)

*Download As PDF*

Saturday 25 July 2009

சாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது?

அம்பேத்கர், உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல; நீண்ட நாளாகவே நாஸ்திகர். ஒன்று சொல்லுகிறேன். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாரும் நாஸ்திகர்கள்தான். நாஸ்திகராக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக் கூடிய மனிதராக ஆக முடிகிறது. அவர் தனது சொந்த அறிவை உபயோகித்து, தான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாரும் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இதுபோலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார். இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்த மதத்தில் சேர்ந்தது. இப்போது பேருக்குத்தான் அவர் புத்த மதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர, அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.

1930 - 35லேயே சாதி ஒழிப்பில் தீவிர கருத்துள்ளவராக இருந்தார்; சாதி ஒழிப்புக்காக பஞ்சாபில் ("ஜாத் பட் தோடக் மண்டல்' என்று கருதுகிறேன்) ஒரு சபை ஏற்படுத்தியிருந்தார்கள். என்னைக்கூட, அதில் ஓர் அங்கத்தினராகச் சேர்த்திருந்தார்கள். அந்தச் சபையினர் சாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து, அந்த மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டார்கள். அவரும் ஒத்துக் கொண்டு தலைமை உரையாக 100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் பல ஆதாரங்களை எடுத்துப்போட்டு, சாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைத் தெரிந்து அவரிடம் "உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள்' என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஆதாரத்தோடு இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு, “உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இது சாதி ஒழிப்புச் சங்கமே தவிர, இந்து மத ஒழிப்புச் சங்கமல்ல; ஆகையால் நீங்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்கிற அந்த ஒரு அத்தியாயத்தை நீக்கிவிட வேண்டும்'' என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள்.

அதற்கு அம்பேத்கர் " சாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழிய வேண்டும்' என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப் பேசாமல் வேறு எதைப் பேசுவது? ஆகையால் அதை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டார். பின் மாளவியா ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார். அதற்கும் அவர், “நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்; தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றிப் பேசுகிறேன்'' என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது.

நான் அம்பேத்கரிடம் அந்தப் பேச்சை வாங்கி, "சாதியை ஒழிக்கும் வழி' என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டேன். அவர் அப்போதே அவ்வளவு தீவிரமாக இருந்தார். நாம் ராமாயணத்தைப் பற்றி வாயால் பேசிக் கொண்டிருக்கும் போதே, அதாவது 1932இலேயே அவர் ராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு என். சிவராஜ் தான் தலைவர். இதெல்லாம் "குடியரசில்' இருக்கிறது. நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரை அழைத்தேன். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக எம்.ஆர். ஜெயகர் வந்திருந்தார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம்ஆகப் போகிறேன் என்று சொன்னார். நானும் எஸ். ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். “தயவு செய்து அவசரப்பட்டு சேர்ந்து விடாதீர்கள். குறைந்தது ஒரு லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கை வைக்கக் கூடாத மதம் (perfect religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கை வைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது'' என்று தந்தியில் சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக் கூடாதென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம் மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக, இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். என்றாலும் அவர் ஏற்கனவே புத்தர்தான்.



(28.10.1956 அன்று, வேலூர் நகராட்சி மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு)
*Download As PDF*

Friday 24 July 2009

முகம்-1

*Download As PDF*

Thursday 23 July 2009

முகம் -3

*Download As PDF*

Sunday 19 July 2009

நாம் இந்துக்கள் அல்லர் என்று விளம்பரப்படுத்திட வேண்டும்

பகுத்தறிவாளர் கழக மாநாடு என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. இதில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதை விளக்கிச் சிறிது கூறுகின்றேன். நடைபாதைக் கோயில்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஒன்று; அரசாங்கம் தீவிரமாக முயற்சி எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அடுத்து வடநாட்டில் ‘ராமநவமி' அன்று ‘ராமலீலா' என்ற பெயரில் தமிழ் மக்கள் - திராவிடர்களின் மனதைப் புண்படுத்தும்படி ராவணன், கும்பகர்ணன் முதலானோர் கொடும்பாவியை எரிக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், ஜனாதிபதி போன்றவர்கள் கலந்து கொள்கின்றார்கள். நாம் பல தடவை கண்டித்தாகி விட்டது. இனி, நாமும் பதில் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

சூத்திரனான சம்புகன் தவம் பண்ணினான்; கடவுளைக் காண முயன்றான். இதன் காரணமாக வர்ணாசிரம தருமம் கெட்டு விட்டது என்றும், இதனால் ஒரு பார்ப்பனப் பையன் இறந்து விட்டான் என்றும் கூறி, ராமன் சம்புகனை வெட்டினான். துண்டு துண்டாக வெட்டிக் கொன்றான். எனவே, இப்படிப்பட்ட ராமனை நாமும் ராமநவமி தினத்தில் எரித்து, வடவருக்கு உணர்த்துவது பற்றி யோசிக்க வேண்டும். அடுத்து, இந்து மதத்தில் இருந்து விலக வேண்டும் என்பது. இந்து மதம் என்ற பெயரில் ஏராளமானவர்கள் உள்ளோம். அத்தனை பேரும் விலக ஒப்புக் கொள்வார்களா என்பது வேறு.

இன்றைக்கு நாம் சூத்திரர்கள் என்பதும், இழி ஜாதி என்பதும் சட்டப்படி, சாஸ்திரப்படி இருக்கின்றது. இன்றைக்குப் பார்ப்பான் யாரும் நம்மை சூத்திரர் என்று சொல்ல அஞ்சி, அடங்கி விட்டான். இன்றைக்கு ஜாதி இழிவை யாரும் பகிரங்கமாகக் கூறவும் முன்வரவில்லை. இப்படி இருந்தும் நமது சூத்திரப் பட்டமும், ஜாதி இழிவும் நீங்கவில்லையே! காரணம் என்ன? பார்ப்பானே அடங்கி விட்டான்; ஜாதி இழிவு பற்றி எவரும் கூறவும் முன்வரவில்லை என்று சொன்னேன். இந்த நிலையில் நம்மிடம் உள்ள இழிதன்மைக்கும், சூத்திரப் பட்டத்திற்கும் யார் மீது குற்றம் கூறுவது? நம்மை நாமேதான் தாழ்த்திக் கொண்டு இழிதன்மையில் உள்ளோம்.

தோழர்களே! இன்றைக்கு கடவுள் இருப்பது இடைவிடாத பிரச்சாரம் காரணமாக உலகில் இருக்கின்றதே ஒழிய, உண்மையில் எவரிடமும் கடவுள் நம்பிக்கை இல்லை. எனவே, நம்முடைய இழிவுக்கு இன்று கடவுள் நம்பிக்கை காரணமாகவும் இல்லை. இன்று நமக்கு உள்ள இழிவு நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டதுதான் என்று மீண்டும் கூறுகின்றேன். இனி மதத்தையோ, கடவுளையோ, பார்ப்பான்களையோ திட்டுவது மூலம் ஒன்றும் பிரயோசனம் இல்லை. உங்கள் இழிவு நீக்கத்திற்கு இனி அது பயன்படாது. நாம் மனிதனாகணும். நாம் ஈன ஜாதியாகாமல் இருக்க வேண்டும். சூத்திரன் அல்லாதவனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆகும்.

நமது இழிவும், சூத்திரப் பட்டமும் இன்று சட்டத்தில் இருக்கின்றதே! இப்படிச் சட்டத்தில் இருக்கும்போது கடவுளையும், பார்ப்பானையும் திட்டி என்ன பிரயோசனம்? அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். இனி நாம் சும்மா இருந்தால் பிரயோசனம் இல்லை. நாம் இன்று இந்து மதத்தின் பட்டியலில் உள்ளோம். நாம் இந்த இந்து மதப்படிதான் சூத்திரன். இது மாற வேண்டுமே! இது கடினமான பிரச்சினை. இதற்குப் பரிகாரம் தேடியாக வேண்டும். சட்டப்படி நீங்கள் சூத்திரன்கள். இந்தச் சட்டம் இந்தியா பூராவுக்கும் உள்ளது. இதனை மாற்றுவது எளிதல்ல. ஒருகால் தமிழகம் தனியாகப் பிரிந்தால் நாம் மாற்றலாம். இதற்குப் பிரிவினை பிரசாரம் செய்ய வேண்டும்.

உடனடியாக நமது ஜாதி இழிவு மாற, நாம் இந்து மதத்தில் இருந்து விலகிவிட வேண்டும். அதற்காக நாம் இந்துவல்ல என்று ஒவ்வொருவரும் விளம்பரப்படுத்திவிட வேண்டும். இந்து அல்ல என்று கூறி விட்டால் - இஸ்லாமாகவோ, கிறித்துவனாகவோ மாறினால், அப்போதும் மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டு விடுவோம். எனவே, அவைகளும் பயன்படாது. எனவே, அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். இது, இன்றைக்குப் பெரிய சிக்கல். மக்கள் சிந்திக்க வேண்டும். மதம் விலகத் துணிய வேண்டும். இதற்கு என்றே ஒரு மாநாடு போட்டு, மதம் விலக ஏற்பாடு செய்ய உத்தேசித்து உள்ளேன். அதற்கு என்று பாரம் அச்சடித்து, அதனைப் பூர்த்தி செய்து, கையொப்பம் வாங்கி, கெசட்டில் போடவும் ஏற்பாடு செய்ய வேண்டி வந்தாலும் வரும்.

எனவே, நமது இழி நிலை மாற, நாம் இந்து மதத்தில் இருந்து நீங்கிக் கொள்ள வேண்டும். அடுத்து நம் மக்களுக்கு இன்று இருந்து வரும் தீண்டாமை இழிவு, நாம் கோயிலுக்குப் போவது மூலம்தான் உள்ளது. குளித்து மூழ்கி கோயிலுக்குப் போனாலும் கர்ப்பக் கிரகத்துக்கு வெளியேயே நீங்கள் நிற்கின்றீர்கள். ஏன் இப்படி நிற்கின்றீர்கள்? நீங்கள் தாழ்ந்தவர்கள், தீண்டப்படாதவர்கள்; அதற்கு மேல் போனால் கோயிலின் புனிதத்தன்மை கெட்டு விடும் என்பதை ஒத்துக் கொண்டே நிற்கின்றீர்கள். எனவே, நம் மக்களின் இழிவும், தீண்டாமையும் நீங்கவும் மக்கள் கோயிலுக்குப் போவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

(22.7.73 அன்று பெரம்பலூர் வட்ட பகுத்தறிவாளர் கழக 2ஆம் ஆண்டு மாநாட்டில் ஆற்றிய உரை) *Download As PDF*

Saturday 18 July 2009

9. மாட்டிக்கொண்ட ராமசாமி

9.
சில நாட்களாக இல்லை. சில மாதங்களாக.. ராமசாமியைக் காணாமல் மிகவும் வருந்தினார் வெங்கட்டர். மனைவி சின்னதாய்யம்மையாரோ.. பித்து பிடித்த நிலைக்கு ஆளானவர் போல.. புலம்பியபடியே இருந்தார். மறுபக்கம் நாகம்மையின் கண்ணீர். என்ன செய்வதென்று தெரிய வில்லை. வியாபாரத்தையும் சரியாக கவனிக்க முடியவில்லை.

ஈ.வெ.ரா.வின் அன்றைய நெருங்கிய நண்பரான ப.வெ.மாணிக்க நாயக்கருக்கு கடிதம் எழுதினார் வெங்கட்டர். இவர் எதிர் பார்த்தபடி பதில் சாதகமாக வரவில்லை. அந்த காலகட்டத்தில் வீட்டை விட்டு ஓடிப் போகும் செல்வந்தர் பலருக்கும் போக்கிடமாக இருந்தது இரண்டு இடங்கள். ஒன்று டிராமாகக் கம்பெனி, இன்னொருன்று தாசிகள் வீடு.

அதையும் விட்டு வைக்க வில்லை வெங்கட்டர். ஒவ்வொரு டிராமாக் கம்பெனியாக அலைந்தார். தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி தாசி வீடுகளில் சோதனை போனச்சொன்னார். எங்கும் ராமசாமி சிக்கவில்லை.

ராமசாமி அங்கு வந்திருக்கிறானா.. எனக்கு அவன் மீது கோபம் இல்லையென கூறுங்கள் என்று ஈரோட்டுக்கு வெளியே இருக்கும் பல மைனர்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால் எங்கிருந்தும் இவர் எதிர் பார்த்த பதில் இல்லை.

அனா கணக்கில் காசு புழங்கிய அக்காலத்தியேயே ராமசாமியைத் தேடி சுமார் இரண்டாயிரம் ரூபாய் வரையும் செலவளித்தார் வெங்கட்டர். ஆனால் அனைத்தும் பட்ட மரத்திற்கு விட்ட நீராகி விட்டது. இனி பையன் எங்கும் கிடைக்க மாட்டான். ஒரு பையனை இழந்தோம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் குடும்பத்தினர்.

பெயருக்கு அப்படியான முடிவுக்கு வந்துவிட்ட போதிலும், ஈ.வெ.ரா.வைப் பற்றி பேசாத நாளே இல்லை எனலாம். கடைக்கு வந்து போகும் அனைத்து வியாபாரிகளிடமும் பையனைப் பற்றிய தகவல்களை சொல்லிக்கொண்டே இருந்தார் வெங்கட்டர்.

****



பெரியார் சில சம்பவங்கள்...

பெரியாரை வடலூரில் இருக்கும் வள்ளலாரின் வாழ்விடத்தைச் சுற்றிக் காண்பிப்பதற்காக அழைத்துச் செல்கிறார்கள். நடக்கவே சிரமப்பட்டு தட்டுத் தடுமாறி ஒவ்வொரு இடமாகப் பார்த்தபடி வருகிறார் பெரியார். அம்மண்டபத்தின் ஒவ்வொரு பகுதியையும் விளக்கியபடி ஊரன் அடிகளும் மற்றவர்களும் உடன் வருகிறார்கள். ஒரு பிரதான அறைக்குள் மற்றவர்கள் நுழைய, வாசலிலேயே நின்று விடுகிறார் ஈ.வெ.ரா. உடன் நடந்து கொண்டிருந்தவர்களுக்கு குழப்பம். ஏன் நின்றுவிட்டார்.. காரணத்தை ஈ.வெ.ராவிடமே கேட்க, அந்த அறையின் முகப்பில் மாட்டப்பட்டிருந்த அறிவிப்பினைக் காட்டுகிறார் பெரியார்.

அதில் கொலை,புலை, தவிர்த்தவர்கள் உள்ளே வரலாம் என்று எழுதி இருக்கிறது.

பெரியாரோ சுத்த அசைவம். அறிவிப்பை மீறி எப்படி உள்ளே போக முடியும்?! ஊரன் அடிகளோ கட்டாயப்படுத்தி, ”பரவாயில்லை. நீங்கள் வாருங்கள். உங்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு” என்கிறார்.

”உண்மைதான் .. அதைப் போலவே நீங்கள் வைத்திருக்கும் அடிப்படைக் கொள்கைகளையும், நான் மதித்தால் அல்லவா, நீங்கள் எனது கருத்துக்கள் மீதும் மரியாதை வைப்பீர்கள்? மற்றவர்கள் உங்களிடம் எப்படி எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்களோ... அப்படி நீங்களும் மற்றவர்களிடம் நடந்து கொள்வதற்குப் பெயர்தான் ஒழுக்கம். வாங்கய்யா மற்ற பகுதிகளைப் பார்ப்போம்..” என்று அவரதி அழைப்பையும் மீறி திரும்பி நடக்கலானார் ஈ.வே.ரா.



எல்லூரில் ராமசாமி இறங்கிய போது இரவு நேரமாகி விட்டது. சுப்பிரமணிய பிள்ளையின் சரியான விலாமும் கையில் இல்லை. ஈரோட்டில் மராமரத்து இலாக்காவில் பணியாற்றியவர் என்ற தகவலும், அவரது அடையாளமும் தவிர வேறு ஏதும் தெரியாது. ரயில் நிலையத்தில் சிலரிடம் இதை கூறி விசாரித்தார். உருப்படியான பதில் கிடைக்க வில்லை. கால் போன போக்கில் அப்படியே நகரத்துக்குள் வந்தார். எதிர் பட்ட தமிழர்கள் சிலரிடம் விசாரித்த போது அவரது வீட்டு விலாசம் தெரிந்தது, சுப்பிரமனியம் வீட்டை நோக்கி நடக்கலானார் ஈ.வே. ராமசாமி.

நேரம் நள்ளிரவை தொட்டுக்கொண்டிருந்தது. வீட்டை அடையாளம் கண்டு, கதவைத் தட்டினார். ‘எவரூ..' என்று சத்தம் வந்ததே ஒழிய கதவு திறக்கப்படவில்லை. 'ஈரோட்டில் இருந்து ராமசாமி வந்திருக்கேன்' என்று இவரும் தெலுங்கில் சொன்னபிறகு கதவு திறக்கப்பட்டது. கதவைத் திறந்த சுப்பிரமணியத்துக்கு, உடல் மெலிந்து, மொட்டைத் தலையுடன் இருக்கும் ராமசாமியை அடையாளம் தெரியவில்லை. 'நீங்க..' என்று வார்த்தையை அவர் இழுத்தார். தன்னை அடையாளம் தெரியாமல் தான் சுப்பிரமணியம் குழம்புகிறார் என்றுணர்ந்த ஈ.வெ.ரா, தன்னை விபரமாக அறிமுகம் செய்து கொண்டார்.

மகிழ்ந்து போன சுப்பிரமணியம் ராமசாமியை வீட்டுக்குள் அழைத்து உபசரித்தார். மாற்று உடைகளை கொடுத்து ஆண்டிக் கோலத்தில் இருந்து விடுதலையாக்கினார். நடுநிசியிலும் ராமசாமிக்காக அவசர அவசரமாக உணவு தயாரித்து வழங்கப்பட்டது.

தந்தையோடு கோபம் கொண்டு தான் வீட்டை விட்டு ஓடிப் போனது தொடங்கி, மோதிரத்தை விற்று எல்லூர் வந்து சேர்ந்தது வரை எல்லா கதைகளையும் சுப்பிரமணியத்திடம் கூறினார். வியந்து போன அவர், 'அப்பாவுக்கு தகவல் கொடுத்திடலாமா' என்று கேட்க, 'அப்படி செய்வதாக இருந்தால் தான் மீண்டும் ஓடிவிடுவேன். உங்களுக்கு தொல்லையில்லை எனில் என்னை தங்க வைத்திருங்கள்' என்று கேட்டுக்கொண்டார் ஈ.வே.ரா. தான் யாருக்கும் தகவல் கொடுக்க மாட்டேன் என்று சுப்பிரமணியமும் உறுதியளித்தார். அவர் வீட்டிலேயே விருந்தினராக தங்கிக்கொண்டார் ராமசாமி.

எத்தனை நாட்களுக்குத்தான் சும்மா உண்டு, உறங்கி, கதை பேசியே நாட்களை கழிக்க முடியும். ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் காலாற நடக்கலானார் ராமசாமி.
மார்க்கெட் பக்கம் வந்ததும், பழைய வியாபர உற்சாகம் தொற்றிக்கொண்டது. ஒவ்வொரு கடையாகப் போய் பொருட்களின் விலை கேட்டு, அதன் தரம் பார்த்தபடியே நடக்கலானார்.

ஒரு விடுமுறை நாளில் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க, வேலையாள் ஒருவரையும் அழைத்துக்கொண்டு சுப்பிரமணியமும், ஈ.வெ.ரா.வும் மார்க்கெட் பக்கம் போனார்கள். தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தார். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ராமசாமி அடுத்த கடைக்கு போனார். அது ஒரு எள் கடை. அக்கே ஒருவர் எள்ளை அளந்து கொண்டிருந்தார். ஒரு கைப்பிடி எள்ளை எடுத்து இரண்டு கையாளும் கசக்கி நுகர்ந்து பார்த்தார் ராமசாமி. அளந்து கொண்டிருந்தவரிடம் எள்ளின் விலையை விசாரித்தார். அவர் விலை சொன்னதும் கையில் எடுத்த எள்ளை அப்படியே போட்டு விட்டு சென்றுவிட்டார். அது எள் வியாபாரியான ஸ்ரீராமுலு என்பவருடையது. அவருக்கு எள்ளை விலை கேட்டுச் சென்ற நபர் பெரிய வியாபரியாகத்தான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டார். கடையை விட்டு வெளியே வந்தௌ ராமசாமி எங்கே போகிறார் என்பதை நோட்டம் விட்டார். ராமசாமி அடுத்த கடைக்குள் போன சிறிது நேரத்தில் சுப்பிரமணியமுடன் வெளியே வந்தார். பின்னடியே பொருட்களை சுமந்தபடி வேலையாள்.

ஸ்ரீராமுலு, அவர்களின் பின்னால் போய்க் கொண்டிருந்த வேலையாளை நிறுத்தி ராமசாமியைப் பற்றி விசாரிக்க, ஈரோட்டு வெங்கட்ட நாயக்கர் மகன் இவர் என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஸ்ரீராமுலுவால் பொறுக்க முடியவில்லை. எத்தனை முறை நான் ஈரோட்டுக்கு சென்று வெங்கட்டரிடம் வியாபரம் செய்திருப்பேன். ஆனால் அவரின் மகன் என் கடையில் பொருள் வாங்காமல் வேறு எங்கெல்லாமோ வாங்கிப் போகிறார். அன்றைய தினமே, ”உங்கள் மகன் என் கடைக்கு வந்து எள்ளை எடுத்துப் பார்த்து, விலை கேட்டு, வேறு எங்கேயே வாங்கிவிட்டுப் போகிறார். விலை படியவிஒல்லை என்றால் சொல்ல வேண்டியது தானே.. நான் குறைத்திருக்க மாட்டேனா... எத்தனை முறை உங்களிடம் வணிகம் செய்திருப்பேன். நாணயம் குறைவாக நடந்துகொண்டதுண்டா..நான்! தங்கள் மகனுக்கு கடிதம் எழுதுங்கள்.. என்னிடமும் வந்து வணிகம் செய்யுமாறு எழுதுங்கள்” என்று ஒரு கடிதத்தை எழுதி வெங்கட்டருக்கு அனுப்பி வைத்தார் ஸ்ரீராமுலு.

கடிதம் பார்த்த வெங்கட்டர் நம்மமுடியாமல் கடிதத்தை மீண்டும் மீண்டும் பல முறை வாசித்தார். வீட்டில் எல்லோருக்கும் தகவலைச் சொன்னார். குடுப்பத்தினர் அடைந்த மகிழ்ச்சி அளவில்லாதது. இனி கிடைக்கவே கிடைக்காது என்று முடிவு செய்து விட்ட ஒரு அவசியமான பொருள் திரும்பக் கிடைத்தால் எவ்வளவு பெரிய மகிழ்ச்சி ஏற்படுமோ, அது போல பலமடங்கு அதிகமான சந்தோசத்தில் துள்ளிக்குதித்தனர் குடும்பத்தினர். வெங்கட்டருக்கு இருப்பு கொள்ள வில்லை. உடனடியாக இருவரை உடன் அழைத்துக்கொண்டு ஸ்ரீராமுலுவின் கடைக்கு புறப்பட்டார்.

ராமசாமி வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தால் என்ன செய்வது, அதனாலேயே இருவரை அழைத்துக்கொண்டார். மாலை வேளையில் ஸ்ரீராமுலுவின் கடைக்குப் போய் சேர்ந்தார். அவரிடம் விபரம் பெற்றுக்கொண்டு, சுப்பிரமணிய பிள்ளையின் முகவரியையும் பெற்றுக் கொண்டு, அவர் வீடு நோக்கி புறப்பட்டனர்.
--------- *Download As PDF*

Friday 17 July 2009

8. காசிக்கு கும்பிடு!

8.
மடத்தை விட்டு வெளியேறிய பின்னர் எங்கு போய் தங்குவது என்ற குழப்பம் தோன்றியது. கால் போன போக்கில் காசியை வலம் வரத்தொடங்கினார். நிறைய மடங்களும் சத்திரங்களும் கண்ணில் பட்டன. சத்திரங்களில் பார்ப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர்.

சிறுகுடலை ருசி பார்க்கத்துடிக்கும் பெருங்குடலுக்கு என்ன தெரியவாபோகிறது.. பெரிய இடத்துப்பிள்ளை இவர் என்று.., பசி.. காதை அடைக்க.. வேறு வழியின்றி.. தன் தோற்றத்தை வைத்து பிச்சை எடுத்து சில நாட்கள் கழித்தார் ராமசாமி.

மடங்களில் சாமியார்கள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். நெய், பால், பழம் என்று உண்டு கொழுத்து திரிந்தனர். சிவனிடம் நேரடி தொடர்பு வைத்திருப்பவர்கள் போல பிரசங்கம் செய்து வந்தனர். இந்த சன்யாசிகளின் பிரசங்கத்தில் மயங்கிய செல்வந்தர்களும் நிலச்சுவாந்தார்களும் காணிக்கையாக பொன்னும் பொருளுமாக கொட்டினார்கள்.

முற்றும் துறந்து விட்டதாக சொல்லிக் கொண்டா சாமியார்களின் மடங்களில் எல்லாம் தனி கஜான வைக்கப்பட்டிருந்தது. இரவு நேரங்களில் பாங்க் போன்ற போதை வாஸ்துக்களை உள்ளே தள்ளிக்கொண்டு, சம்போ,சிவ சம்போ என்று ஆடினார்கள் சன்யாசிகளும் அவர்கள் பக்தர்களும். சிவன் சொத்தாக மதிக்கப்பட்ட கஞ்சாவை கூச்சமின்றி ஆண்களும் பெண்களும் புகைத்து சிவத்தோத்திரம் சொல்லி மகிழ்ந்தார்கள்.

மடங்களின் நிலை இதுவென்றால்.. கங்கை கரையில் அமர்ந்து சிராத்தம் செய்யும் பண்டாக்களின்(பார்ப்பனர்கள்) நிலை வேறு விதமாக இருந்தது. இறந்து போன ஒருவர் சொர்க்கத்துக்கு போகவேண்டுமானால்.. கோ தானம் செய்யுங்கள், அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால்.. பிண்டம் வைத்து பூஜை செய்யுங்கள், பித்ரு சாபம் போக பண்டாக்களுக்கு தட்சணையுடன் போஜனம் வழங்குங்கள் என்று மக்களின் அறியாமையை வியாபராக்கிக்கொண்டிருந்த கும்பலையும் கண்டார்.

சுத்தமாக இருப்பதாக காட்டிக்கொண்டு, வாயில் மந்திரங்கள் முணுமுணுத்தபடி இருந்த பண்டாக்கள் மாலையானதும்.. கஞ்சா குடிப்பதும், அசைவம் சாப்பிடுவதும், பிச்சை எடுத்து திரியும் பெண்களை கட்டாய பலாத்காரம் செய்வதுமாக வலம் வந்தார்கள். கங்கை கரையை ஒட்டி இருந்த காட் பகுதிகளில் பண்டாகள் மட்டுமின்றி அவர்களின் மனைவியரும் மற்றும் சந்நியாசிகளும் சேர்ந்து போதை வஸ்துக்களை அருந்தி விட்டு காமக்களியாட்டம் போடுவதையும் கண்டார் ராமசாமி. மிகுந்த நம்பிக்கையும் ஆச்சரமுமான குடும்பத்திலிருந்த வந்த ராமசாமியால் இந்த காட்சிகளை ஜீரணிக்க முடியவில்லை. காசி மீதிருந்த.. மதிப்பும், மரியாதையும் வெகு விரைவாக கரையத் தொடங்கியது. இனிமேலும் இங்கே நீடித்தால்.. அது மேலும் வெறுப்பை உண்டாக்கி விடும் என்றுணர்ந்த ராமசாமி காசியைவிட்டு கிளம்ப ஆயத்தமானார்.


ஒரு முறை ஜி.டி.நாயுடுவை சந்திக்க அவர் வீட்டிற்கு ஈ.வே.ரா., சென்றிருந்த போது, ஈ.வே.ரா.வின் பையில் வைத்திருந்த மணி பர்ஸை வெடுக்கென பறித்த நாயுடு அதிலிருந்த ரூபாய் நோட்டுக்களை தன் ஆய்வுக்கு வேண்டுமென எடுத்துக்கொண்டார். வெறும் சில்லரைகள் நிறைந்திருந்த பர்ஸை ஈ.வே.ரா.விடம் திரும்பக்கொடுத்தார்.
அடுத்த முறை நாயுடுவை சந்திப்பு நிகழ்ந்த போது, பழையபடி பர்ஸை பறித்த நாயுடு ஏமாற்றம் அடைந்தார். உள்ளே சில்லரை காசுகளே இருந்தது. நாயுடுவை சந்திக்கப்போகிறோம் என்று தெரிந்தாலே ரூபாய் நோட்டுக்களை எடுத்து பத்திரப்படுத்தி விடுவார் ஈ.வே.ரா.



வேறு ஊருக்கு செல்லவேண்டுமானால் ரயில் டிக்கேட் எடுக்க பணம் தேவை. பிச்சை எடுத்து அதை செய்வதற்குள் போதும்,போதும் என்றாகி விடும். யோசனையில் புரண்டு படுத்த போது இடுப்பில் ஏதோ தட்டுப்பட்டது. தடவிப் பார்த்த போது என்றோ தான் மறைத்து வைத்த தங்க மோதிரம் என்று அறிந்து மகிழ்ந்தார் ராமசாமி.

அன்றைய சூழலில் அந்த மோதிரத்தை வெறும் பத்தொம்பது ரூபாய்க்கு விற்றார். கிடைத்த பணத்தைக்கொண்டு அப்படியே தெற்கு நோக்கி கிளம்பினார். சின்ன சின்ன ஊர்களை எல்லாம் பார்த்தபடியே ஒரு ரயில் நிலையத்தை அடைந்தார் ராமசாமி. ஆந்திரம் செல்லும் ஒரு ரயிலில் டிக்கேட் எடுத்துக்கொண்டு ஏறினார். வண்டி ஏலூர் என்ற இடத்தை அடைந்ததும் இவருக்கு சுப்பிரமணியபிள்ளை என்பவரின் நினைவு வந்தது. சுப்பிரமணியம் ஈரோட்டில் வேலை பார்த்து வந்தவர். தன் மனைவியுடன் ஏலூரில் செட்டிலாகி இருந்தார். அவரைப் பார்த்து ஏதாவது வேலை கேட்கலாம் என்ற எண்ணம் வர.. ரயிலில் இருந்து இறங்கினார் ராமசாமி.
---- *Download As PDF*

7. எச்சில் இலையில் பசியாறிய ராமசாமி!

முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்யும் தலம். ஒவ்வொரு மண் துகளிலும் கடவுளின் உருவத்தை பார்க்க முடிகின்ற தேசம். பாலிலும் தேனிலும் குளித்து எழும் மனிதர்கள். செழிப்பும் வனப்புமாய் இருக்கும் குடிமக்கள். வாழும் காலத்திலேயே ஒருவன் சொர்க்கத்தை பார்க்க வேண்டுமென்றால் காசி போனால் போதும், எல்லா மனிதர்களின் பாவங்களை போக்கும் புனித கங்கை நதி ஓடும் பூமியின் சொர்க்கம். பசி என்று எவரும் இருந்து விட முடியாது.. செல்வந்தர்கள் பல அன்னதான சத்திரங்களை உருவாக்கி வருவோர், போவோர் எல்லோருக்கும் உணவு அளித்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்படி தான் கேட்டு பூரித்துப்போன காசி நகருக்கு வந்து சேர்ந்தார் ராமசாமி.

அதுவரை ராமசாமியுடன் இருந்த பிராமணர்கள் இருவரும் இவரை தனியே விட்டு விட்டு பிரிந்து போயினர். மொழியும் தெரியாமல் வழியும் புரியாமல் காசி நகர வீதிகளில் உலா வரத்தொடங்கினார். மாமிச மலைபோன்ற உடம்புடைய மனிதர்களை ரிக்சாவில் வைத்து எலும்பு மனிதர்கள் இழுத்து செல்லும் காட்சியைப் பார்த்தார் ராமசாமி. சாலையோரங்களில் ஆண், பெண் இல்லாத பிச்சைக்காரர்களும், உடலுறுப்புகள் பாதிப்படைந்து நோய் கண்ட வியாதிக்காரர்களும் தர்மம் கேட்டு குரல் கொடுத்தபடி கிடந்தார்கள்.

பண்டாரங்களும், பாராயணம் செய்பவர்களும் சொல்லித்தந்த காசி போல அந்த நகரம் இல்லை. தங்களின் வயிற்றுப்பாட்டுக்கு அவர்கள் பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளனர் என்பது புரியத்தொடங்கியது. சத்திரங்களை தேடிப் பார்த்தார் ஏதும் கண்ணில் படவில்லை. கையில் இருக்கும் காசை செலவளித்து ஒரு நாளை ஓட்டி விட்டார்.

பசி அதன் வேலையை வயற்றுக்குள் செய்யத்தொடங்கி இருந்தது. மறுநாள் காலையிலேயே புறப்பட்டுப் போனார். லட்சுமண்காட், ஹஸ்சி காட் உட்பட்ட பல பகுதிகளில் சத்திரங்களைத் தேடி அலைந்த போது தான் அன்னதான சத்திரம் என்று தமிழில் எழுதப்பட்ட ஒரு சத்திரத்தைக் கண்டதும் பெரும் மகிழ்ச்சி கொண்டார் ராமசாமி. இனி கொஞ்ச காலத்திற்கு கவலை இல்லாமல் காசியில் கழித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் அந்த சத்திரம் நோக்கிப் போனார்.

இவரது மீசை உடைகளை கண்ட உடன் அத்திரத்தின் வாசலில் இருந்த காவலாளி உள்ளே விட மறுத்தான். அவனிடம் சண்டை போட்டார் ராமசாமி. ஆனால் அவனோ.. அந்த சத்திரம் பிரமணர்களுக்காகவே கட்டப்பட்டுள்ளது என்றும் மற்றவர்களுக்கு உணவளிக்க முடியாது என்றும் ராமசாமியை துரத்தி விட்டான்.

ஐத்ராபாத்திலிருந்து உடன் வந்த இரு பிராமணர்களும் தன்னை தனியே விட்டுப் போனதின் காரணம் புரிந்தது. தான் இல்லாமல் போய் இருந்திருந்தால் அவர்கள் நிச்சயம் பிச்சை மட்டுமே பெற்று சாப்பிட்டிருக்க முடியும். முருகேச முதலியார் மாதிரியானவர்களின் நட்பு கிடைத்திருக்காது. இவ்வளவு சீக்கிரம் காசி வந்திருக்கவும் மாட்டார்கள். தன்னால் உதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் இப்படி நடு நோட்டில் நிற்க வைத்துவிட்டார்களே என்ற எண்ணம் சோர்வை ஏற்படுத்தியது. வெளியில் நடப்பது ஏதுமறியாத பெருங்குடல் சிறுங்குடலை திண்றுகொண்டிருக்கிறதோ என்ற அச்சம் கொள்ளும் அளவுக்கு வயிற்றில் வலி எடுத்தது. அது பசியால் ஏற்படும் வலி என்பதை உணர்ந்து கொண்ட ராமசாமி.. வேறு சத்திரங்களைத் தேடி அலைந்தார்.

நண்பகல் வரை கண்ணில் பட்ட எல்லா சத்திரத்திங்களில் இருந்தும் விரட்டியடிக்கப்பட்டார். முதல் சத்திரத்தில் சொல்லப்பட்ட அதே பதிலைத் தான் எல்லா சத்திர காவலாளிகளும் சொன்னார்கள். கடைசியாக ஒரு சத்திர காவலாளியிடம் உள்ளே போக அனுமதி கேட்டு சண்டை போட்டுக் கொண்டிருந்த போது.. மற்றவர்கள் சாப்பிட்டு முடித்த எச்சில் இலைகளை வெளியில் இருந்த குப்பைத்தொட்டியில் வந்து போட்டு விட்டுப் போனார்கள்.

ஒரு பக்கம் இனம் தெரியாத கோபம், மற்றொரு பக்கம் காதடைக்கும் பசி. காவலாளியுடன் ஈடுபட்டிருந்த வாக்குவாததை விட்டுவிட்டு குப்பைத் தொட்டி நோக்கிப் போனார் ராமசாமி. அங்கிருந்த தெரு நாய்களை விரட்டி விட்டு.. தொட்டிக்குள் இருந்த எச்சில் இலைகளை எடுத்து தரையில்வைத்தார். அதன் முன் நன்றாக அமர்ந்து கொண்டார். இலைகளில் மிச்சமிருந்த சோற்றை காலி செய்யத்தொடங்கினார். நெய் வாசமிக்க அந்த பதார்த்தங்கள் தன் வீட்டை நினைவு படுத்தின. கண்களில் கண்ணீர் பெருகி பார்வையை மறைத்தது. புறங்கையால் அதனை துடைத்து விட்டு சோற்றை வழித்து, வாயில் வைத்து வயிற்றுக்குள் தள்ளினார். இலைகள் மலமலவென காலியாகின.

கொஞ்சம் தெம்பு வந்தது போல இருந்த்து. நிமிர்ந்து உட்கார்ந்தார். இனியும் புரட்டர்கள் பேச்சை நம்பி காசியில் பிழைக்க முடியாது. ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று வேலை தேடி அலைந்தார். மொழி தெரியாததினால்.. போன இடங்களில் இருந்து எல்லாம் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டார்கள். சரி.. காசியை சுற்றிய போது பார்த்த மடங்கள் அன்னச்சத்திரங்களில் சென்று வேலை கேட்டார். அங்கும் இவரை ஒரு மனிதராகக் கூட மதிக்காமல் விரட்டி விட்டனர். முகத்தில் இருக்கும் பெரிய மீசையும், தன் கிராப் வைத்த தலை முடியினாலும் தான் இந்த நிலை என்று உணர்ந்துகொண்டு, மொட்டை போட்டு மீசையையும் மழித்து விட்டார். ஆடையும் காவிக்கு மாறி இருந்தது.

கங்கை ஆற்றின் கரையில் இறந்து போனவர்களுக்கு காரியம் செய்து முடித்த பின், பண்டாராங்களை அழைத்து சோறு போடுவதைக்கண்டார். ராமசாமியும் வரிசையில் நின்று சாப்பிட்டார். சில நாட்கள் பண்டாரங்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டுவிடும். சீனியர் பண்டாரங்கள் இவரை ஓரங்கட்டி விடுவார்கள். வியாபரத்தில் கெட்டிக்காரராக இருந்து என்ன பயன்.. பண்டாரங்களுடன் போட்டி போட்டு.. சாப்பிட முடியாமல் போனது.

தனக்கு இது சரிப்பட்டு வராது என்று சாமியார்கள் மடங்களைத்தேடி போனார் வேலை கேட்டு.., ஒரு மடத்தில் பூஜைக்கு வில்வம் பறித்துக்கொடுக்கும் வேலை கிடைத்தது. அதோடு காலை மாலை இரு வேலைகளிலும் விளக்கு ஏற்ற வேண்டும், சம்பளம் கிடைக்காது. தினம் ஒரு வேலை மட்டும் சாப்பாடு போடுவோம் என்றார்கள். சரி என்று ஒப்புக்கொண்டார். வயிற்றுக்கு வஞ்சனை இருந்தாலும் வேலை கிடைத்து விட்டது.

தினம் அதிகாலை மூன்று மணிக்கே குளித்து சுத்தபத்தமாக வில்வம் பறித்து பூஜைக்கு தயாராகி விட வேண்டும். ராமசாமி வேலைக்கு சேர்ந்த சமயமோ கடும் பனி கொட்டும் குளிர் சமயம். சும்மாவே குளிப்பதற்கு ஆயிரம் சாக்கு போக்கு சொல்லும் ராமசாமியா குளிரில் குளிப்பார். கங்கை கரைக்குச் சென்று துண்டை கங்கையாற்றில் நனைப்பார். ஈரமாக்கிய துண்டைக்கொண்டு உடலை துடைத்துக்கொள்ளுவார். பின் வேஸ்டியை நனைத்து ஈரமாகவே அதையும் அணிந்து கொள்வார். இப்பொது குளியல் போட்ட எபெஃக்ட் வந்துவிடும். தயாராக வைத்திருக்கும் விபூதியை தண்ணீரில் குழைத்து பட்டை போட்டுக்கொள்வார். உடல் சூட்டில் தண்ணீர் காய விபூதி பளிச்சென்று தெரியத்தொடங்கும். அப்படியே வில்வம் பரித்து ஓலைக்கூடையில் போட்டுக்கொண்டு மடத்துக்கு வந்து விடுவார்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற சொலவடை போல.. ராமசாமியில் இந்த வேலை அதிகநாள் நீடிக்க வில்லை. காலைக்கடனை முடித்து, கால் கழுவ கங்கைக் கரைக்கு வந்த சாமியார் ஒருவர், கரையில் நின்றுகொண்டு ராமசாமி போடும் வேசத்தைப் பார்த்து விட்டார். இத்தனை நாளாக குளிக்காமல் தான் இவன் வில்வம் பறித்து வ்ருகிறான.. அல்லது இன்று மட்டும் இப்படி நடந்து கொள்கிறான என்ற சந்தேகம் அந்த சாமியாருக்கு வந்தது. அவசர அவசரமாஅக் தன் பணியை குடித்துக்கொண்டு, மடத்துக்கு திரும்பி பெரிய சாமியாரிடம் தான் கண்டவற்ரை போட்டு உடைத்தார்.

இந்த விபரங்கள் ஏதும் தெரியாத ராமசாமி, வழக்கம் போல வில்வம் பறித்து முடித்து விட்டு மடத்துக்குள் நுழைய முற்பட்ட போது தான் கவனித்தார். மடத்துச்சாமியார்கள் எல்லோரும் கூடி வாசலிலேயே நின்றுகொண்டிருந்தார்கள். வில்வக்கூடையை கீழே வைத்து விட்டு என் கேள்விக்கு உண்மையான பதிலைச்சொல்லு என்று கேட்டார் பெரிய சாமியார். கூடையை கீழே வைத்து விட்டு கேளுங்கள் என்றார் ராமசாமி. இன்று குளிக்காமலா.. வில்வம் பறித்தாய்? ஆமாம் என்று அலட்சியமாக பதில் வந்தது. எத்தனை நாளாக இப்படி நடக்குது? கொள்ளை நாளாக இப்படித்தான் நடக்குது. அடப்பாவி!ஆண்டவனுக்கு செய்யப்படும் பூஜையில் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது தெரியாதா..? இப்படி குளிக்காமல் இந்த பணியில் ஈடுபடுவது என்பது பெரிய குற்றம் என்பது தெரியாதா? நாங்கள் எல்லோரும் குளித்து சுத்தமாக இருப்பதை பார்த்துமா உனக்கு அறிவு வரவில்லை? என்று கேள்விகளை அடுக்கினார் பெரிசு. அது எல்லாம் சரி சாமி.. ஆனா.. உலகையே காக்கும் உங்க ஆண்டவன் ஒரு நாளும் குளித்துப் பார்த்ததே கிடையாதே. அப்ப அதுமட்டும் சரியா? அந்த ஆண்டவனையே உங்களில் ஒருவர் தானே குளிப்பாட்டி விடுகிறீர்கள்? என்று எதிர்க்கேள்வி கேட்க.. சாமியார்களுக்கும் ராமசாமிக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் சண்டையாகி மடத்தை விட்டு சாமியார்களால் வெளியேற்றப்பாட்டார் ராமசாமி.

------------------ *Download As PDF*

Tuesday 7 July 2009

பார்ப்பான் நீதிபதியாய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும்

மேன்மை தங்கிய கனம் நீதிபதிகள் அவர்களே சமூகம் கோர்ட்டார் எனக்கு அனுப்பியிருக்கும் நோட்டீசில், சமூகம் கோர்ட்டை அவமதித்ததாகவும், அதற்கு ஏன் நான் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்குக் காரணம் காட்ட வேண்டுமென்றும் கோரப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு சிவசாமி (தலியார்) என்பவரால் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லி, எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பிரமாணப் பத்திரிகையில் (Write petition) ரிட் பெட்டிஷன் நெம்பர் 568 55 இல் சமூகம் கோர்ட்டு தீர்ப்பில், கனம் திருச்சி ஜில்லா கலெக்டரைப் பற்றிச் சொல்லப் பட்டிருப்பவைகளைக் குறித்து, திருச்சி பொதுக்கூட்டத்தில், நான் 4.11.1956 ஆம் தேதியில் மேற்படி தீர்ப்பைச் சொன்ன கனம் நீதிபதிகளைக் குறை கூறியிருப்பதாகவும், அந்த நீதிபதிகளைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியிருப்பதாகவும், அவர்களுக்கு உள்ளெண்ணம் கற்பித்துத் தாக்கியிருப்பதாகவும், அதனால் சமூகம் கோர்ட்டின் கவுரவம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சமூகம் கோர்ட் நீதிபரிபாலனத்திற்கு இடையூறு விளைவிப்பதாகவும் இருக்கிறதென்றெல்லாம் கண்டிக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டு வார்த்தைகளில், நேரிடையான பொருளுக்கு, ஏற்றமாதிரி நான் யாதொரு குற்றம் செய்தவனல்ல. பொதுவாக, மனித சுபாவத்தைப் பற்றியும், நீண்ட காலமாக அது பிரதிபலித்து வருவதைப் பற்றியுமே எடுத்துச் சொல்லி, அதற்குப் பரிகாரம் தேடவே முயற்சித்து இருக்கிறேன். உதாரணமாக பிரஸ்தாபத் தீர்ப்பில் ரிட் பெட்டிஷன் நெம்பர் 568 55 தீர்ப்பில் பாதிக்கப்பட்டிருப்பவர் ஒரு திராவிடர். அதிலும் தமிழர் (Non-Brahmin) மீது தீர்ப்புக் கொடுத்திருக்கிறவர்கள் பிராமணர்கள் என்று சொல்லப்படுகிற பார்ப்பனர்கள். இந்தத் தீர்ப்பின்மீது என்னுடைய ஆராய்ச்சிக்கு எட்டிய கருத்து, பாதிக்கப்பட்டவர் பார்ப்பனரல்லாதாராய் இருப்பதாலும், தீர்ப்புக் கூறினவர்கள் பார்ப்பனர்களாயிருப்பதாலும் இம்மாதிரி ஏற்பட்டது என்பது எனது தாழ்மையான முடிவு...

மநுதர்ம சாஸ்திரத்தின்படி, ஒரு பார்ப்பனரல்லாதவன் (சூத்திரன்) ஒரு நாட்டிலே (பார்ப்பனர்களும் வாழும் நாட்டிலே) நீதிபதியாகவோ, நிர்வாக அதிகாரியாகவோ, அமைச்சராகவோ, அரசனாகவோ, உயர் பதவியாளனாகவோ இருக்கக்கூடாது என்பது தர்மமாகும். அப்படியிருக்கவிடக்கூடாது என்பதும் பார்ப்பனர் தர்மமாகும். இந்த மநு தர்மந்தான் நீதிபதிகள் கையாளும் இந்துச் சட்டத்திற்கு மூலாதாரமாகும். இதற்கு உதாரணங்கள் அதிகம். கனம் கோர்ட்டார் அவர்களுக்குக் காட்டவேண்டியதில்லை என்றே கருதுகிறேன்... ஆகையினால்தான் பார்ப்பனர்கள் எந்தப் பதவியிலிருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம், பார்ப்பனரல்லாதார்களை ஒழித்துக் கட்டுவதில், தலையெடுக்கவிடாமல் செய்வதில், சரியாகவோ, தப்பாகவோ, காலாகாலம் பாராமல் தங்கள் முயற்சிகளைச் செய்து கொண்டுதான் வருவார்கள். இப்படி இவர்கள் நீண்ட நாட்களாக செய்து வருகிறார்கள் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் எடுத்துக் காட்ட முடியும்...

...என்னுடைய குறிப்பெல்லாம் பொதுவான பார்ப்பன ஜட்ஜுகள் யாராக இருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சட்டத்தைப் பொறுத்து எப்படி நடந்து கொண்டாலும், தமிழனுக்குத் தன்னாலான கேடு செய்து அழுத்தவோ, அழிக்கவோ செய்ய வேண்டியது, அவர்கள் ஜாதி மதக் கடமை என்பதும், இதில் யாரும் எந்தப் பார்ப்பனரும், மறந்தும் தவறி நடக்க மாட்டார்கள் என்பதும், இந்த நிலை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மற்றவர் கடமை என்பதும்தான்... நான் சொல்வதெல்லாம் எங்களைக் "கீழ் சாதி' என்றும், நாங்கள் மேலே வருவது தங்களுக்கு ஆபத்து என்றும், தங்கள் மதத்திற்குக் கேடு என்றும், தங்களை மேல் ஜாதி என்றும், இந்த ஜாதிப் பிரிவுகள் இப்படியே இருக்க வேண்டும் என்றும் கருதிக் கொண்டிருக்க மநுதர்ம இந்து பார்ப்பனர்கள் ஜட்ஜுகளாகவும், வேறு எந்த உத்தியோகஸ்தர்களாகவும் எங்கள் நாட்டில் எங்களுக்கு வேண்டாம். வேறு நாட்டில் அவர்களுக்கு எவ்வளவு உயர் பதவி வேண்டுமானாலும் கொடுங்கள். அவற்றில் நாங்கள் குறுக்கிடவில்லை. இந்தக் கருத்தை வெளியிடும் வகையில்தான் பிரஸ்தாப வழக்கு பேச்சில் நான் பேசியிருக்கிறேன்...

பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளராய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும். ஆதலால், நாங்கள் புலிவேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்ததில் ஒருவர் இருவர் அடிபட வேண்டியதுதான். "எல்லா பார்ப்பனர்களும் அப்படித்தானா?' என்று கனம் ஜட்ஜுகள் சிந்தித்து, நான் சொல்வதைத் தவறு என்று கருதலாம்...

...இந்த மாதிரி விஷயம் எப்படி இருந்தாலும், உண்மையில் விவாதத்திற்கு இடமில்லாமல், ஒரு நீதிபதி என்பவர் தவறானது என்று சொல்லும்படியான தன்மையில் நடந்து கொண்டால், தீர்ப்பு அளித்தால், அதற்குப் பரிகாரம் தேட வேண்டுமானால், பொதுமக்களுக்கு வழி என்ன இருக்கிறது? அப்பீலுக்கே போய்த் தீரவேண்டுமானால், எல்லோருக்கும் எல்லாக் காரியங்களிலும் அப்பீலில் இடமிருக்குமா? அரசாங்கத்தில் அரசர் ராஷ்டிரபதி பிரதமர் முதலமைச்சர் முதலியவர்களுடைய போக்குகளைப் பற்றியும், உத்தரவுகளைப் பற்றியும், பொதுக்கண்டனங்களும் கிளர்ச்சிகளும் செய்யத் தாராளமாக இடம் சட்ட அனுமதியும் கிடையாது என்றால், மக்களுக்குச் சுதந்திரம் எங்கே இருக்கின்றது? பரிகாரம் எப்படித் தேடுவது? பொதுஜனங்களுடைய உணர்ச்சிகளை எப்படிக் காட்டுவது?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டதற்கு 23.4.1957 அன்று,
சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துப் பேசியதிலிருந்து..
 *Download As PDF*